கோவில் வளாகத்தில் வாலிபர் கொலை: உறவினர் உள்பட 3 பேர் கைது


கோவில் வளாகத்தில் வாலிபர் கொலை: உறவினர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2021 10:46 AM IST (Updated: 25 Jun 2021 10:46 AM IST)
t-max-icont-min-icon

கோவில் வளாகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஸ்டாலின் நகர் பகுதியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்திற்குள் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாகிர் உசேன் (வயது 28) படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி ஜாகிர் உசேனின் மனைவி சரண்யாவின் தம்பி குமரேசன் (23), அவரது நண்பர்கள் திருத்தணி பெரியார் நகரை சேர்ந்த சந்தோஷ் பாபு (22), அரக்கோணம் சாலையை சேர்ந்த ஜெயச்சந்திரன் (22) ஆகியோரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் இவர்கள் அளித்த வாக்குமூலத்தில்:-

தனது தங்கை சரண்யாவின் கணவர் ஜாகீர் உசேன் தினசரி குடிபோதையில் தனது தங்கையை தாக்கி வந்தார். சம்பவத்தன்று தனது தங்கை காயப்படும் படி அவர் தாக்கி உள்ளார். இதை அறிந்து அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தனது நண்பர்கள் சந்தோஷ் பாபு ஜெயச்சந்திரன் ஆகியோர் உதவியுடன் உச்சி பிள்ளையார் கோவில் பின்புறம் மதுகுடிக்க வந்த ஜாகிர் உசேனை கத்தி மற்றும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் திருத்தணியில் நடந்த முக்கிய பிரமுகர் கொலை வழக்கு உள்பட திருப்பத்தூர் மாவட்டத்திலும் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வருகிறது.

Next Story