தேனி மாவட்டத்தில் மேலும் 4 பேர் உயிரை பறித்த கொரோனா


தேனி மாவட்டத்தில் மேலும் 4 பேர் உயிரை பறித்த கொரோனா
x
தினத்தந்தி 25 Jun 2021 8:57 PM IST (Updated: 25 Jun 2021 8:57 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மேலும் 4 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது.

தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 60 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 149 பேர் நேற்று குணமாகினர். தற்போது 713 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கம்பத்தை சேர்ந்த 47 வயது பெண், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 44 வயது ஆண், தேனி பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஆகிய 3 பேர் நேற்று உயிரிழந்தனர். அதுபோல் கொரோனா பாதிப்புடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தேனியை சேர்ந்த 64 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை 483 பேர் உயிரை கொரோனா பறித்துள்ளது.


Next Story