கொரோனா கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் குறித்து பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்காகவும், மருத்துவ சிகிச்சை தொடர்பான புகார்களை அரசுக்கு தெரிவிக்கவும் இந்த கட்டுப்பாட்டு அறை பொதுமக்களுக்கு உதவுகிறது.
இங்குள்ள அலுவலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு அறையை கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்களின் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்படுகிறதா? மருத்துவ சிகிச்சை தொடர்பாக அவர்கள் கொடுக்கும் புகார்களுக்கு உரிய தீர்வு கிடைக்கிறதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அலுவலர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்தும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாநில திட்ட அலுவலர் கந்தசாமி, மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story