மரக்காணம் அருகே காரில் கடத்திய உயர்ரக மதுபாட்டில்கள் பறிமுதல்
வாலிபர் கைது
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த தாழங்காடு சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிக்குமார், கோட்டக்குப்பம் போலீஸ் ஏட்டுகள் ஆறுமுகம், கணேசன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காருக்குள் 141 உயர்ரக மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், புதுச்சேரி மாநிலம் பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 31) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story