பெரியநாயக்கன்பாளையத்தில் மது கடத்திய அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது


பெரியநாயக்கன்பாளையத்தில் மது கடத்திய அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2021 11:05 PM IST (Updated: 25 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையத்தில் மது கடத்திய அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இடிகரை

பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெட்டதாபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், தீலக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் திரும்பி செல்ல முயன்றது.

 இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக, அந்த ஜீப்பை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சீட்டுக்கு அடியில் 96 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணயைில், அவர்கள் காரமடை வெள்ளியங்கிரியை சேர்ந்த மணி என்பவரின் மகன்கள் தமிழ்செல்வன் (32), மகேஷ்குமார் (30) என்பதும், மதுபாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, ஜீப்பை பறிமுதல் செய்தனர்.

இதேபோல ஒன்னிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 48 மதுபாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினிலாரி டிரைவர் சசிக்குமார் (38), விஜயகுமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து, மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

Next Story