வால்பாறையில் உடல்நலம் பாதித்த காட்டெருமைக்கு சிகிச்சை


வால்பாறையில் உடல்நலம் பாதித்த காட்டெருமைக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 25 Jun 2021 11:06 PM IST (Updated: 25 Jun 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் உடல்நலம் பாதித்த காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் அதிகமாக காட்டெருமைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஸ்டேன்மோர் எஸ்டேடில் புதுக்காடு 23-ம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள தேயிலை தோட்டத்தில் நடக்க முடியாமல் காட்டெருமை படுத்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச்சரகர் ஜெயச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று காட்டெருமை பார்வையிட்டனர். தொடர்ந்து வால்பாறை அரசு கால்நடை டாக்டர் மெய்யரசன் வரவழைக்கப்பட்டு காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டெருமை உடல்நல குறைவு ஏற்பட்டு நடக்கமுடியாமல் படுத்து கிடக்கிறது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காட்டெருமை உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றனர். 

Next Story