தமிழக-கேரள எல்லையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 25 பேர் கைது
தமிழக-கேரள எல்லையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
கொரோனா பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கவில்லை. இதற்கிடையில் கேரளாவில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதை தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து மது பிரியர்கள் கேரளாவுக்கு மதுபாட்டில்கள் வாங்க படையெடுக்க தொடங்கினர். சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து மதுபாட்டில்கள் வாங்குவதை தடுக்க நேற்று 3-வது நாளாக தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தாலுகா போலீசார் நடத்திய வாகன சோதனையில் 20 வழக்குகள் செய்யப்பட்டன. வடக்கிபாளையம் போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர். இதுகுறித்த புகார்களின் பேரில் 25 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் அவர்களிடம் இருந்து 14 லிட்டர் கள், 66 லிட்டர் கேரள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story