கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை


கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை
x
தினத்தந்தி 25 Jun 2021 11:20 PM IST (Updated: 25 Jun 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி நாடகமாடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி,

கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கொரோனாவால் உயிரிழந்ததாக கூறி நாடகமாடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். 

ஊட்டியில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கள்ளக்காதல்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கியூ பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முஸ்தபா(வயது56). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முஸ்தபாவுக்கும், காந்தல் புதுநகரை சேர்ந்த மாகி(51) என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவருக்கும் ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். எனினும் கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

வாக்குவாதம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாகி, பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அதன்பிறகு மாகியை தனிமையில் சந்திக்க விரும்பிய முஸ்தபா, அவரை வெளியே அழைத்து சென்றார். 

அவர்கள் இருவரும் ஊட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உல்லாசம் அனுபவித்தனர். அப்போது முஸ்தபாவிடம் மாகி செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கழுத்தை நெரித்து கொலை

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற முஸ்தபா, மாகியை தாக்கி கழுத்தை நெரித்தார். இதில் மூச்சுத்திணறி அவர் உயிரிழந்தார். அதன்பிறகு அவரது உடலை துணியால் சுற்றி தனது காரில் ஏற்றிக்கொண்டு புதுநகர் பகுதியில் உள்ள வீட்டுக்கு முஸ்தபா சென்றார். பின்னர் அங்குள்ளவர்களிடம் கொரோனா பாதிப்பால் மாகி இறந்து விட்டதாக கூறினார்.

எனினும் சந்தேகம் அடைந்த அவர்கள், ஊட்டி நகர மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கைது

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேரில் வந்து முஸ்தபாவிடம் விசாரணை நடத்தினர்.  போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முஸ்தபாவின் குட்டு வெளிப்பட்டது. தன்னிடம் பணம் கேட்டு தகராறு செய்த கள்ளக்காதலி மாகியை கொலை செய்துவிட்டு நாடகமாடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தபாவை கைது செய்தனர். இந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story