மின் கம்பி திருடிய 2 பேர் கைது
மின் கம்பி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதி,ஜூன்.
கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. பல்வேறு கிராம பகுதிகள் வழியாக செல்லும் இந்த மின் உற்பத்தி நிலையத்தில், கோவிலாங்குளம் சுற்றுப்பகுதியில் 9 ஆயிரம் மீட்டர் அளவுள்ள மின் கம்பி திருட்டு போனது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து மின் கம்பி திருடியதாக தொட்டியாபட்டியைச் சேர்ந்த செந்தூர்முருகன் (22), வேல்முருகன் (25) ஆகிய 2 பேரை கோவிலாங்குளம் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டிராக்டர், ஒரு மோட்டார்சைக்கிள், ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story