அரக்கோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை


அரக்கோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2021 11:24 PM IST (Updated: 25 Jun 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டூர். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்

வெட்டிக்கொலை

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோதண்டன் (வயது 31). இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். கோதண்டன் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. 

இதனால் அவரை பெற்றோர்கள் தேடி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வடமாம்பாக்கத்தில் உள்ள தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கோதண்டன் தலையில் வெட்டப்பட்டு ரத்த காயத்துடன் கொலைசெய்யப்பட்டு கிடந்துள்ளார்.

 பழிக்குப்பழியாக நடந்ததா?

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோதண்டனின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

இதிபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா கொலை நடந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். கொலையான கோதண்டன் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என்பதால் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story