142 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி


142 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 Jun 2021 11:28 PM IST (Updated: 25 Jun 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

142 கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ராமநாதபுரம்,ஜூன்.
தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் உள்ள கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறைத்துறை தலைவர் சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி சிறை கண்காணிப்பாளர் தவமணி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. 
சிறையின் மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் எபினேசர் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட சிறைக்கு வந்தனர். அவர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் முதுகுளத்தூர் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள கைதிகள் என மொத்தம் 142 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.  
சிறை கைதிகள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் அடுத்த கட்டமாக 2-வது தவணை தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை சிறையில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும் கண்காணிப்பாளர்தவமணி தெரிவித்தார்.

Next Story