சாலையோரம் நின்ற லாரியில் திடீர் தீ
தக்கலையில் சாலையோரம் நின்ற லாரியில் திடீர் தீ.
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனைக்கு செல்லும் சாலையோரம் கடந்த 2 நாட்களாக ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியில் தேங்காய் சிரட்டைகள் அடங்கிய மூடைகள் இருந்தன. நேற்று மாலை அந்த லாரியில் இருந்து புகை மூட்டம் கிளம்பியது. இதைகண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, திடீரென மூடைகள் இருந்த பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. அப்போது, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story