பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கிய சாராயம் பறிமுதல். பெண் கைது
பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கிய சாராயம் பறிமுதல். பெண் கைது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வள்ளிவாகைப்பட்டி புதூர் கிராமத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 9 பிளாஸ்டிக் கேன்களில் 315 லிட்டர் சாராயம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கீழ்பென்னாத்தூர் வள்ளிவாகைப்பட்டி கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்த கண்ணம்மா (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story