முதலீடு செய்த ரூ.3¾ கோடியை தரக்கோரி திருச்சியில் தனியார் நிதி நிறுவனம் முன் அமர்ந்து சிவகாசி ஜெயலட்சுமி தர்ணா


முதலீடு செய்த ரூ.3¾ கோடியை தரக்கோரி திருச்சியில் தனியார் நிதி நிறுவனம் முன் அமர்ந்து சிவகாசி ஜெயலட்சுமி தர்ணா
x
தினத்தந்தி 25 Jun 2021 11:36 PM IST (Updated: 25 Jun 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

முதலீடு செய்த ரூ.3¾ கோடியை தரக்கோரி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் முன் அமர்ந்து சிவகாசி ஜெயலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி, 
முதலீடு செய்த ரூ.3¾ கோடியை தரக்கோரி திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் முன் அமர்ந்து சிவகாசி ஜெயலட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவகாசி ஜெயலட்சுமி

சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி மன்னார்புரம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருச்சி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். 

இந்தநிலையில் கடந்த 2004-ம் ஆண்டில் போலீசார் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் கொடுத்த சிவகாசி ஜெயலட்சுமி நேற்று முன்தினம் இரவு திருச்சியில் உள்ள நிதிநிறுவனம் முன் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.3¾ கோடியை தர வேண்டும் என வலியுறுத்தி அவர் இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார். 

நிதி நிறுவனம் முன் தர்ணா

இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் அங்கு சென்று சிவகாசி ஜெயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் நேற்று காலை முதல் மீண்டும் அவர் அங்கு தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார்.

இதுகுறித்து சிவகாசி ஜெயலட்சுமி கூறுகையில், ‘இந்த நிதி நிறுவனத்தில் ரூ.3¾ கோடி வரை முதலீடு செய்து 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பணத்தை திருப்பித் தரவில்லை. என்னை நம்பி இதில் முதலீடு செய்த பலர் என்னிடம் பணம் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பதில் கூறியாக வேண்டும். ஆகவே எனது பணத்தை திருப்பித் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன். அதுவரை தனது போராட்டம் தொடரும்’ என்றார்.
ஆனால் இதுகுறித்து அவர் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை என தெரிகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Next Story