காதலிப்பதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த பெண்


காதலிப்பதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த பெண்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:40 PM IST (Updated: 25 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

காதலிப்பதாக கூறி ரூ.3 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக காதலி மீது மாற்றுத்திறனாளி வாலிபர் தக்கலை போலீஸ் துைண சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ெகாடுத்தார்.

பத்மநாபபுரம்:
காதலிப்பதாக கூறி ரூ.3 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக காதலி மீது மாற்றுத்திறனாளி வாலிபர் தக்கலை போலீஸ் துைண சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ெகாடுத்தார்.
மாற்றுத்திறனாளி வாலிபர்
தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் ஆனந்த், பட்டதாரி வாலிபர். பிறவியிலேயே வலது கை இழந்த மாற்றுத்திறனாளி. இவர் நேற்று மாலை தக்கலையில் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 5 ஆண்களுக்கு முன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது நண்பனை பார்க்க சென்றேன்.  அப்போது அங்கு லேப்டெக்னீசியன் படித்து வந்த  ஒரு இளம்பெண்ணை சந்தித்தேன். இருவரும் முதலில் நண்பர்களாக பழகினோம். நாளடைவில் நாங்கள் காதலிக்க தொடங்கினோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.3 லட்சம் வரை பெற்றுள்ளார். 
ஏமாற்றினார்
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். வாங்கிய பணத்தையும் கொடுக்க மறுத்து விட்டார். இதனால், நான் மனதளவும் , உடலளவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என்னை காதலித்து ஏமாற்றி ரூ.3 லட்சம் பணம் பறித்த காதலி மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story