போலீஸ் நிலையத்தில் கேக் வெட்டி காவலர் பிறந்தநாள் கொண்டாட்டம்


போலீஸ் நிலையத்தில் கேக் வெட்டி காவலர் பிறந்தநாள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2021 11:45 PM IST (Updated: 25 Jun 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி போலீஸ் நிலையத்தில் போலீீஸ்காரர் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

ஆரணி

ஆரணி போலீஸ் நிலையத்தில் போலீீஸ்காரர் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றுள்ள பவன்குமார்ரெட்டி அனைத்துப் போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், காவலர்களாக பணிபுரிவோருக்கு உயர் அதிகாரிகளால் வேலை பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பிறந்தநாள், திருமண நாள் ஆகியவற்றை குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லை எனத் தெரிகிறது.  எனவே மன அழுத்தத்தைப் போக்க இனிவரும் காலங்களில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவருடைய பிறந்தநாளை போலீஸ் நிலையத்திலேயே கேக் வெட்டி அவர்கள் சார்பாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு ஒருநாள் சிறப்பு விடுப்பு வழங்கலாம், எனக் கூறப்பட்டு இருந்தது. 

அதன் பேரில் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரியும் மதிவாணன் என்பவருக்கு பிறந்தநாள் விழா ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ்பாண்டியன் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரகு வரவேற்றார். 

நிகழ்ச்சியில் காவலர் மதிவாணன் தனது மனைவி, குழந்தை, காவலர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அவருக்கு நேற்று ஒருநாள் சிறப்பு விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் நன்றி கூறினார்.

Next Story