கோவில்களின் முன்பு சூடம் ஏற்றி இந்து முன்னணியினர் போராட்டம்
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அனைத்து கோவில்களையும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 கோவில்களின் முன்பு சூடம் ஏற்றி போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்,ஜூன்.
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அனைத்து கோவில்களையும் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 கோவில்களின் முன்பு சூடம் ஏற்றி போராட்டம் நடந்தது.
கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கோவில்களை திறக்கவும் அனுமதிக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவில்களின் முன்பு சூடம் ஏற்றி பிரார்த்தனை போராட்டம். நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில், ராமேசுவரம் காட்டு பிள்ளையார் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், மண்டபம் சந்தன மாரியம்மன் கோவில், உச்சிப்புளி சந்தனமாரியம்மன் கோவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோவில்,
திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், மாரியூர் பூவேந்தி நாதர் கோவில், சாயல்குடி கைலாசநாதர் கோவில், பரமக்குடி கோதண்டராமர் கோவில், பரமக்குடி திரவுபதி அம்மன் கோவில், நயினார்கோவில் நாகநாதர் கோவில், தொண்டி சிதம்பரேஸ்வரர் கோவில், போகலூர் ஓட்டமட காளியம்மன் கோவில், என்.மங்கலம் சொர்ணகாளீஸ்வரர் கோவில், திருவாடானை கட்டிவயல் சிவன் கோவில், புதுமடம் விநாயகர் கோவில், குஞ்சார்வலசை மாரியம்மன்கோவில் ஆகிய 18 கோவில்களின் முன்பு இந்து முன்னணியினர் சூடம் ஏற்றி பிரார்த்தனை போராட்டம் நடத்தினர்.
கோஷம்
இந்த போராட்டங்களில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ராமநாதபுரம் நகர் தலைவர் பாலமுருகன், நகர பொது செயலாளர் கார்த்திக், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட செயலாளர் குமார், நகர் தலைவர் நாராயணன், நகர துணை தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாடானை தாலுகா என்.மங்கலம், கட்டிவயல் கிராமங்களில் இந்து இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் பரணிதரன் தலைமையில் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் கோவில்களை திறக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story