கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் கோவில்கள் முன் போராட்டம் நடத்தினர்.
கோவை
கோவில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் கோவில்கள் முன் போராட்டம் நடத்தினர்.
வழிபாட்டு தலங்கள் மூடல்
கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கோவையில் உள்ள கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன், ரத்தினபுரி ரத்தன விநாயகர் கோவில், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் உள்பட ஏராளமான கோவில்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஆர்ப்பாட்டம்
கோவை காந்திபுரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார்.
இதில் கோட்ட செயலாளர் சதீஷ், கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், பொது செயலாளர் ஜெய்சங்கர், செய்தி தொடர்பாளர் தனபால், மகேஷ்வரன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் வழிபட கோவில்களையும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
Related Tags :
Next Story