கடலில் தவறி விழுந்து மீனவர் பலி


கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
x
தினத்தந்தி 25 Jun 2021 11:53 PM IST (Updated: 25 Jun 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக இறந்தார்.
படகில் இருந்த கடலில் விழுந்த மீனவர் 
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவை சேர்ந்த விஜய் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 2 மணிக்கு மடவாமேடு கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 
பூம்புகார் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாண்டவன்குளம் கிராமம் கருத்தான்குத்து தெருவை சேர்ந்த ராஜாராமன் மகன் நாராயணமூர்த்தி (21) என்பவர் படகில் இருந்து தவறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.
பரிதாப சாவு
சக மீனவர்கள் நாராயண மூர்த்தியை மயங்கிய நிலையில் மீட்டு மடவாமேடு கிராமத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் நிலைய போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story