கோவையில் ரூ100 ஐ நெருங்கும் பெட்ரோல் விலை


கோவையில் ரூ100 ஐ நெருங்கும் பெட்ரோல் விலை
x
தினத்தந்தி 25 Jun 2021 11:59 PM IST (Updated: 25 Jun 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கி உள்ளது.

கோவை

கோவையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கி உள்ளது. 

பெட்ரோல் விலை 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. 

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டீசல் விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.

ரூ.100-ஐ நெருங்கியது

இந்த நிலையில் கோவையில் பெட்ரோல் விலை அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100-ஐ தொட்டு உள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.38-க்கும், டீசல் விலை அதிகரித்து லிட்டர் ரூ.93.33-க்கும் விற்பனை ஆனது. 

கொரோனா நெருக்கடியிலும் இதுபோன்ற தொடர் விலையேற்றம் மிகுந்த துயரத்தில் ஆழ்த்துவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர். 

குறைக்க வேண்டும் 

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, பெட்ரோலுடன் சேர்ந்து டீசலும் விலை உயர்ந்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. 

ஏற்கனவே கொரோனா காலத்தில் பலர் வேலை இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவது மேலும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. 

இதை உடனடியாக குறைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றனர். 


Next Story