88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Jun 2021 12:25 AM IST (Updated: 26 Jun 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் பலியானார்.

சிவகங்கை,ஜூன்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 350 ஆக உயர்ந்தது. நேற்று 81 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தற்போது அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 712 ஆக உள்ளது. இதனிடையே சிவகங்கையைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஒருவர் மதுரையில் கொரோனாவுக்கு பலியானார்.

Next Story