இந்து முன்னணியினர் போராட்டம்


இந்து முன்னணியினர் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 12:29 AM IST (Updated: 26 Jun 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதிக்காததால், அவை தற்போதும் மூடப்பட்டு காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் கோவில்களை திறக்க தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் தாலுகாக்களில் இந்து முன்னணி அமைப்பினர் நூதன முறையில் கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
அதன்படி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மதனகோபாலசுவாமி கோவில் முன்பு நகர தலைவர் கண்ணன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் முன்பு ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ரெங்கநாதன், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் முன்பு மாவட்ட செயலாளர் செல்வகுமார், பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் மலை கோவில் முன்பு ஆலத்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் கதிரேசன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணியினர் கோவிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்ட அரசு கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டு்ம் என்ற கோஷத்தை எழுப்பினர்.

Next Story