வெண்ணந்தூர் அருகே ரேஷன் கடையில் குவியும் பொதுமக்கள்-கொரோனா பரவும் அபாயம்


வெண்ணந்தூர் அருகே ரேஷன் கடையில் குவியும் பொதுமக்கள்-கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 26 Jun 2021 12:34 AM IST (Updated: 26 Jun 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே ரேஷன் கடையில் குவியும் பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெண்ணந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை, 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் பணி கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி நடந்து வருகிறது. இந்தநிலையில் வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் ஆயிபாளையம் ரேஷன் கடையில் கொரோனா நிவாரண தொகை, மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக குவிந்து வருகிறார்கள். 

சிலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ரேஷன் கடையில் குவிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story