கோவில்களை திறக்க வலியுறுத்தி கற்பூரம் ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி நேற்று மாநிலம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி நாமக்கல்லில், நரசிம்மர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.
அப்போது தமிழகத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதேபோல் நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவில் முன்பும் கற்பூரம் ஏற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டங்களில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்கமல், நகர துணை தலைவர் ஜெகன், பொருளாளர் கார்த்திக்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி, கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு ஓங்காளி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தங்கினார்.
இதேபோல் திருச்செங்கோடு கைலாசநாதர் கோவில் முன்பு நகர செயலாளர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலும் பரமத்திவேலூர், பள்ளிபாளையம், குமாரபாளையம், வெண்ணந்தூர் உள்பட பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் மொத்தம் 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story