10 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
காரியாபட்டியில் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அச்சம்பட்டி, பழைய தீப்பெட்டி ஆபீஸ் கட்டிட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காரியாபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்ததில் காரியாபட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு (வயது 75), சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூரைச்சேர்ந்த செல்வகுமார் (42) என்பதும், அவர்கள் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காரியாபட்டி போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சாமிக்கண்ணு, செல்வகுமார் ஆகியோர் மீது காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story