இந்து முன்னணியினர் நூதன போராட்டம்


இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 12:55 AM IST (Updated: 26 Jun 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசி, 
கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான பூஜைகளை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களை திறந்து சாமி தரிசனம் செய்ய பக்தர் களை அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் கோவில்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிவகாசி சிவன் கோவில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் இந்து அமைப்புகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோவிலை திறக்க கோரி வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சுரேஷ் என்பவர் தலைக்கீழாக நின்றவாறு தனது கோரிக்கையை நூதனமுறையில் வலியுறுத்தினார்.

Next Story