பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 1:04 AM IST (Updated: 26 Jun 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் விருதுநகரிலும் பி.எஸ்.என்.எல்.  ஊழியர்கள் சங்க செயலாளர் குருசாமி தலைமையில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 4 ஜி சேவை தாமதத்தை தவிர்க்க வலியுறுத்தியும், ஊழியர்களுக்கான சம்பள பட்டுவாடா தாமதத்தை தவிர்க்க வலியுறுத்தியும், தொலைத்தொடர்புத்துறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரியும், சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story