நொய்யல் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட பேக்கரி உரிமையாளருக்கு அபராதம்
நொய்யல் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட பேக்கரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாத்துக்கறி விற்றவரும் சிக்கினார்.
நொய்யல்
பேக்கரிக்கு அபராதம்
நொய்யல் குறுக்குச் சாலையில் பரமத்தி வேலூர் செல்லும் பிரிவு சாலைேயாரம் உள்ள பேக்கரி ஒன்று ஊரடங்கை மீறி திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக புகளூர் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் ஜெகமணி, வருவாய் ஆய்வாளர் கற்பகவல்லி, கிராம நிர்வாக அலுவலர் பூபதி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஊரடங்கை மீறி செயல்பட்ட அந்த பேக்கரியை மூடி பூட்டினர். பின்னர் பேக்கரி உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வாத்துக்கறி விற்பனை
இதேபோல, தவுட்டுபாளையத்தில் இருந்து பாலத்துறை செல்லும் சாலைேயாரம் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாட்டுடன் சமைத்த வாத்து கறி வாடிக்கையாளர்களுக்கு விற்றது கண்டறியப்பட்டது. அங்கு, தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அரசு விதிமுறைகளை மீறி உணவகத்தில் சாப்பிட அனுமதித்ததாக அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடையை பூட்டி சீல் வைத்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story