தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 Jun 2021 1:27 AM IST (Updated: 26 Jun 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

வீட்டு மனை கேட்டா தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சிவகாசி, 
திருத்தங்கல் கண்ணகி காலனியில் கடந்த 10 வருடங்களாக சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு சிவகாசி தாலுகா அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தாலுகா அலுவலகம் வந்த அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு தங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு மீண்டும் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ராஜ்குமார், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு ெசன்று விரைவில் பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story