கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு - மந்திரி சுரேஷ்குமார் பேட்டி


கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு - மந்திரி சுரேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 26 Jun 2021 1:30 AM IST (Updated: 26 Jun 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு:

  பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பள்ளிகளை திறப்பது குறித்து...

  கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள், கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அதிகாரிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறையின் ஆலோசனைகளை பெற்று பள்ளிகளை திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். குழந்தைகள் நீண்ட காலம் வீடுகளில் இருப்பது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லதல்ல. கடந்த காலங்களில் பள்ளிகளில் இருந்து கொரோனா பரவவில்லை.

  கொரோனா பாதிப்பு குறைந்தால் பள்ளிகளை திறக்கலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. பள்ளிகளுக்கு வர குழந்தைகள் மிக ஆர்வமாக உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டை போல் பள்ளிகளில் வித்யாகம திட்டத்தை தொடங்கி வகுப்புகளை நடத்தலாம் என்று சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதனால் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

தேவையான நடவடிக்கை

  அதுவரை ஆன்லைன், சமூக வலைத்தளங்கள், கல்வி தொலைக்காட்சி மூலம் குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

10-ம் வகுப்பு தேர்வை பாதுகாப்பான சூழலில் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வருகிற 28-ந் தேதி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
  இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Next Story