நாமக்கல்லில் பெண் கொலை: கைதான வேலைக்காரி சேலம் சிறையில் அடைப்பு
நாமக்கல்லில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வேலைக்காரி சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் நடராஜபுரம் 4-வது வீதியில் வசித்து வந்தவர் ஜானகி (வயது 50). இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் உள்ள படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜானகியை, அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த ஜெனிபர் (25) என்பவர் கல்லால் தாக்கியும், முகத்தை தலையணையால் அமுக்கியும் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் ஜானகி காதில் அணிந்திருந்த ¾ பவுன் கம்மலையும் திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தர்மபுரியில் பதுங்கி இருந்த ஜெனிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது சம்பள பணத்தை தராமல், வீட்டில் தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதால் ஜானகியை கொலை செய்ததாக அவர் கூறினார். இதையடுத்து போலீசார் ஜெனிபரை கைது செய்து நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேடடு் ஜெயந்தி முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஜெனிபர் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story