சேலம் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 657 பேர் குணமடைந்தனர்


சேலம் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து 657 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 26 Jun 2021 1:36 AM IST (Updated: 26 Jun 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் புதிதாக 398 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 657 பேர் குணமடைந்த நிலையில், 9 பேர் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியில் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருந்தது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக கடந்த 7-ந் தேதி முதல் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. இதனிடையே கடந்த 22-ந் தேதி முதல் கொரோனாவுக்கு 500-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 398 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 94 பேர் அடங்குவர். மேலும் சேலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 174 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 52 பேரும், நகராட்சி பகுதிகளில் 13 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 65 பேருக்கும் கொரோனா நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 86 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 657 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 2 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சேலத்தை சேர்ந்த 9 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,432 ஆக அதிகரித்துள்ளது.

Next Story