ெசங்கோட்டையில் போராட்டம் நடத்திய இளம்ெபண் மீது தற்கொலை முயற்சி வழக்கு


ெசங்கோட்டையில் போராட்டம் நடத்திய இளம்ெபண் மீது தற்கொலை முயற்சி வழக்கு
x
தினத்தந்தி 26 Jun 2021 1:55 AM IST (Updated: 26 Jun 2021 1:55 AM IST)
t-max-icont-min-icon

ெசங்கோட்டையில் போராட்டம் நடத்திய இளம்ெபண் அபிதா மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பொதுமக்கள் புகார் கூறியதால் பரபரப்பு நிலவுகிறது.

தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை தாட்கோ நகரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியதாக, புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரான்சிஸ் அந்தோணி சிகிச்சை பெற்றபோது, அவருடைய இளைய மகள் அபிதா (22), தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறியும், அரசு ஆஸ்பத்திரியின் மேல்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஏறியும் தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜீத் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். தொடர்ந்து போலீசார் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் அபிதா தனது வீட்டின் மேற்கூரையில் ஏறி மீண்டும் போராட்டம் நடத்தினார். அவருைடய அக்காள் பெர்னா ஜூலியா வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதற்கிடையே, அபிதாவின் தொடர் போராட்டத்தால் தங்களது ஊருக்கு அவப்பெயர் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நள்ளிரவில் அபிதா போராட்டத்தை கைவிட்டு, வீட்டின் மேற்கூரையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

இந்த நிலையில் தற்ெகாலைக்கு முயன்றதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அபிதா மீது செங்கோட்டை மற்றும் புளியரை போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அபிதாவின் வீட்டின் அருகில் பாதுகாப்புக்காக இருந்த போலீசாரும் திரும்பி சென்றனர்.
இதற்கிடைேய புளியரை, புதூர், தாட்கோ நகர், கட்டளை குடியிருப்பு ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜீத் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியதால் தங்களது பகுதிகளில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைந்தன. கேரள மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ெவளிமாநில லாட்டரி சீட்டுகளையும், கணக்கில் காட்டப்படாத ரூ.33 லட்சத்தையும், புகையிலை பொருட்களையும் ேபாலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவருடைய மகள் அபிதா தேவையில்லாமல் போராட்டம் நடத்தி வருகிறார். எனவே சப்-இன்ஸ்ெபக்டர் முருகேசன், ஏட்டு மஜீத் ஆகிய 2 பேரையும் மீண்டும் புளியரை போலீஸ் நிலையத்திேலயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story