நெல்லையில் அணுமின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் அணுமின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2021 2:05 AM IST (Updated: 26 Jun 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அணுமின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் மோகன், முருகன், லிங்கராஜா, சிதம்பர முருகன், குமார் உள்பட கலந்து கொண்டனர். 

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். கட்டாய விடுமுறை வழங்கி தொழிலாளர்களின் வருமானத்தை குறைப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். 

Next Story