நிலத்தகராறில் பெண் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து
சேலம் அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 3 பேரை கத்தியால் குத்திய உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்
சேலம் அருகே நிலத்தகராறில் பெண் உள்பட 3 பேரை கத்தியால் குத்திய உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலத்தகராறு
சேலம் அருகே உள்ள வீராணம் வயல்காடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 30). இவருக்கு அந்த பகுதியில் நிலம் உள்ளது. அந்த நிலப்பிரச்சினை சம்பந்தமாக இவருக்கும், இவரது அண்ணன் பழனிசாமி, அக்காள் ராஜம்மாள் ஆகியோர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து உள்ளது.
இந்த நிலையில் அந்த நிலத்தில் ராஜம்மாள் குப்பை கொட்டி உள்ளார். அதற்கு நடராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் இருதரப்பினரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
கத்திக்குத்து
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் நிலம் சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் மகேந்திரன், பிரபாகரன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் நடராஜனின் மனைவி மனோன்மணி மற்றும் உறவினர்கள் கார்த்தி, ரூபன் ஆகியோரை கத்தியால் குத்தி உள்ளனர்.
இதில் 3 பேரும் காயமடைந்தனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரன் (வயது 31), பிரபாகரன் (30) பழனிசாமி (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story