கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி-கலெக்டர் திடீர் ஆய்வு


கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி-கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 26 Jun 2021 2:06 AM IST (Updated: 26 Jun 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீரென ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்:
கலெக்டர் ஆய்வு
பரமத்திவேலூர் தாலுகா கபிலர் மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இதனை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களை பாராட்டினார். மேலும், வெளியே வரும்போது முககவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னுரிமை
இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறதா? என செவிலியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்குள்ள கருவிகள், மருத்துவ வசதிகள், மருந்துகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் நோயாளிகளின் வருகை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கெட்டறிந்தார்.
தொடர்ந்து கிராமப்புற வளரின பெண்கள், கர்ப்பிணிகளின் ரத்த சிவப்பணு எண்ணிக்கையை ஆய்வு செய்யும் கருவி குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story