தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு


தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 26 Jun 2021 2:14 AM IST (Updated: 26 Jun 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய என்ஜினீயரிங் மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

அம்பை;
கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருடைய மகன் சரவணன் (வயது 23). என்ஜினீயரிங் மாணவர். இருவரும் கல்லிடைக்குறிச்சி அருகே உறவினர் திருமண வீட்டிற்கு வந்திருந்தனர்.

பின்னர் நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக தந்தை கண் முன்னே சரவணன் தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்ததும் அம்பை தீயணைப்பு துறையினர் வந்து ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்ைல.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் சரவணனை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். 

அப்போது அவர் குளித்த இடத்தில் இருந்து நூறு மீட்டர் அருகில் குடிநீர் திட்ட பைப் லைனில் சிக்கி உடல் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். தகவல் அறிந்ததும் அம்பை போலீசார் உடனடியாக வந்து உடலை கைப்பற்றி அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story