கைதி கொலை; முன்னாள் பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டிடம் சி.பி.சி.ஐ.டி.விசாரணை


கைதி கொலை; முன்னாள் பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டிடம் சி.பி.சி.ஐ.டி.விசாரணை
x
தினத்தந்தி 26 Jun 2021 2:41 AM IST (Updated: 26 Jun 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

கைதி கொலை தொடர்பாக முன்னாள் பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

நெல்லை:
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் பாவநாசம் மகன் முத்து மனோ (வயது 27). இவர் பிளஸ்-2 மாணவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், களக்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அப்போது அங்கிருந்த சில கைதிகளால் முத்து மனோ கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி, கைதிகளான ஜேக்கப் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கு நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டாக இருந்த கிருஷ்ணகுமார் சமீபத்தில் சென்னைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் போலீசார் சென்னைக்கு நேரடியாக சென்று, கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

Next Story