போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
மானூர் அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
மானூர்:
மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பாமல் மாயமானார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் மானூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மாணவியை நெல்லை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்த குமார் மகன் சிவா (வயது 23) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிவாவை கைது செய்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story