சாலையோரத்தில் கொட்டப்பட்ட காலாவதியான குளிர்பானங்கள்
தாராபுரம் அருகே சாலையோரத்தில் காலாவதியான குளிர்பானங்கள் கொட்டப்பட்டுள்ளன.
தாராபுரம்
தாராபுரம் அருகே சாலையோரத்தில் காலாவதியான குளிர்பானங்கள் கொட்டப்பட்டுள்ளன.
வியாபாரம் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக மளிகை கடைகளில் குளிர்பானங்கள் விற்பனை மிகவும் குறைந்து போனது. அதுபோன்று பேக்கரிகள், டீ கடைகள் திறக்கப்படவில்லை. இதனாலும் குளிர்பானங்கள் விற்பனை பன்மடங்கு குறைந்தது.
மேலும் ஊரடங்கு காலத்தில் பலருக்கு வேலையின்றி போனதால் அனாவசிய செலவுகளை குறைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பணத்தை செலவிட்டனர். மது அருந்தும் பலர் குளிர்பானங்களில் மதுவை கலந்து குடிப்பது வழக்கம். ஆனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இதனாலும் குளிர்பானங்கள் விற்பனை மேலும் சரிவடைந்தது.
காலாவதியான குளிர்பானங்கள்
இதனால் பல கடைகளில் வைக்கப்பட்டு இருந்த குளிர்பானங்கள் காலாவதியாகின. அதனை வாங்கி குடிப்பவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் அந்த குளிர்பானங்களை கடைகாரர்கள் சாலை ஓரங்களில் கொண்டு வந்து கொட்டி அளித்தனர்.
இது ஒரு புறம் இருக்க சில கடைகாரர்கள் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்களை விற்பனை செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என தாராபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story