சாலையோரம் பனியன் நிறுவன கழிவுகள்
வீரபாண்டி அருகே சாலையோரம் பனியன் நிறுவன கழிவுகள் குவிந்து கிடப்பதை அப்புறப்படுத்தப் படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த் துள்ளனர்.
திருப்பூர்
வீரபாண்டி அருகே சாலையோரம் பனியன் நிறுவன கழிவுகள் குவிந்து கிடப்பதை அப்புறப்படுத்தப் படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த் துள்ளனர் .
பனியன் நிறுவன கழிவுகள்
வீரபாண்டியில் இருந்து கருப்பகவுண்டன்பாளையம் செல்லும் பகுதியில் ஒரு ஓடை செல்கிறது. இந்த ஓடையில் அந்த பகுதியை சேர்ந்த நிறுவனங்கள் மழைக்காலங்களில் கழிவுநீரை திறந்து விடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகுவதாக பலரும் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே அந்த பகுதியில் சாலையோரம் ஓடையையொட்டி பனியன் நிறுவன கழிவுகளை பலரும் கொட்டி வருகிறார்கள்.
ஓடையை ஒட்டி தடுப்புகள் அமைக்கப்படாமல் இருப்பதால், இந்த கழிவுகள் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றமும் வீசி வருகிறது. இதுபோல் இறைச்சி கழிவுகளும் குவிந்து கிடப்பதால் நாய்கள் இறைச்சிகளை அங்கும், இங்குமாக தூக்கி சாலைகளில் வீசி வருகின்றன.
பாட்டில்கள்
இதுபோலவே அந்த சாலையோரம் ரசாயன பாட்டில்களும் ஏராளமானவை கிடக்கின்றன. இதில் பல பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. எதிர்பாராதவிதமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி சாலையோரம் விழுந்தாலும், அந்த பாட்டில்களில் விழுந்தால் அவர்களின் நிலைமை மோசமாகி விடும். இதனால் பலரும் அச்சம் அடைந்துள்ளனர். அந்த அளவிற்கு உடைந்த பாட்டில்கள் சாலையோரம் உள்ளன. எனவே இந்த பகுதிகளில் குப்பைகள் மற்றும் பனியன் நிறுவன கழிவுகள், கட்டிட கழிவுகளை கொட்டுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான நிலையில் உள்ள பாட்டில்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story