குறைந்த விலையில் பாமாயில் தருவதாக அழைத்துச்சென்று 9 வயது சிறுமியை தாக்கி பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் கைது


குறைந்த விலையில் பாமாயில் தருவதாக அழைத்துச்சென்று 9 வயது சிறுமியை தாக்கி பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2021 11:00 AM IST (Updated: 26 Jun 2021 11:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா நகரில், குறைந்த விலையில் பாமாயில் தருவதாக அழைத்துச்சென்று 9 வயது சிறுமியை தாக்கி பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவர் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பெண் ஒருவர் சிறிய கடை வைத்துள்ளார். அங்கு வந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரன் என்ற முரளிதரன் (வயது 56) என்பவர் குறைந்த விலையில் பாமாயில் தருவதாக கூறினார். அதை நம்பிய அந்த பெண், தனது 9 வயதான மகளை அவருடன் ஆட்டோவில் அனுப்பி வைத்தார்.

சிறிது தூரம் சென்ற பிறகு ஆட்டோ டிரைவர் பிரபாகரன், அந்த சிறுமியை தாக்கி பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பிரபாகரனை பிடித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிறுமியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Next Story