வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொடுமை
கோட்டக்குப்பம் அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் கருணாநிதி மகள் அஸ்வினி (வயது 31). இவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள ஆகாசம்பட்டை சேர்ந்த வேணு மகன் பிரபாகரன் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அஸ்வினிக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது.
இவர்களது திருமணத்தின்போது அஸ்வினியின் பெற்றோர், மாப்பிள்ளை வீட்டாருக்கு 35 பவுன் நகையை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்த சூழலில் பிரபாகரன், அஸ்வினிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கணவர் கைது
மேலும் அஸ்வினியிடம் உனது பெற்றோர் வீட்டில் இருந்து மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு அவரது மாமனார் வேணு, மாமியார் வளர்மதி ஆகிய இருவரும் அஸ்வினியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஸ்வினி, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதுகுறித்து அஸ்வினியின் தாய் சுமதி, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரபாகரன், வேணு, வளர்மதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story