போடியில் 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம்


போடியில் 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம்
x
தினத்தந்தி 26 Jun 2021 8:58 PM IST (Updated: 26 Jun 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

போடியில் 45 நாட்களுக்கு பிறகு ஏலக்காய் ஏலம் நடந்தது.

போடி(மீனாட்சிபுரம்):
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 45 நாட்களுக்கு பிறகு போடியில் உள்ள ஏலக்காய் நறுமண பொருள் வாரியத்தில் நேற்று காலையிலும், மாலையிலும்  ஏலக்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கம்பம், உத்தமபாளையம், பட்டிவீரன்பட்டி, விருதுநகர் மற்றும் கேரள மாநிலத்தின் வண்டன்மேடு, சாந்தம்பாறை, மூணாறு ஆகிய பகுதிகளில் இருந்து ஏலக்காய் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இ-மெயில் மூலம் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஏலக்காய் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு ஏலக்காயின் தரத்தை பார்வையிட்டு, கொள்முதல் செய்தனர். இதில் முதல்தர ஏலக்காய் 1 கிலோ ரூ.1,747-க்கும், நடுத்தர ஏலக்காய் ரூ.1,103-க்கும் விற்பனை ஆனது. ஏலத்தில் மொத்தம் 79 ஆயிரத்து 703 கிலோ ஏலக்காய் விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு ஏலக்காய் ஏலம்  நடைபெற்றதையொட்டி விவசாயிகள், வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story