விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் மத்திய அரசு வேளான் திருத்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி பயணிகள் விடுதி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராமசுப்பு, தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் சரவண முத்து, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Related Tags :
Next Story