உத்தமபாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு


உத்தமபாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 26 Jun 2021 9:28 PM IST (Updated: 26 Jun 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு போனது.

உத்தமபாளையம் :
கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர் உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியில் உள்ள மாமனார் தர்மராஜின் வீட்டில் குடியிருந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக வினோத்குமார் வேலைக்கு செல்லவில்லை. 
இதைத்தொடர்ந்து வினோத்குமார் தனது மாமனார் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சாமாண்டிபுரத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இந்த நிலையில் கோவிந்தன்பட்டியில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வினோத்குமார் அங்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ஒரு பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story