மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்து; டிரைவர் காயம்
கடம்பூர் அருகே மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் காயம் அடைந்தார்.
கயத்தாறு:
கயத்தாறில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் தனியார் குடிநீர் வினியோகம் செய்யும் மினி டேங்கர் லாரி நேற்று சென்று கொண்டிருந்தது. திருமலாபுரம் விலக்கு அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள குளத்துக்கு செல்லும் சாலையோர ஓடையில் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து டிரைவரை பத்திரமாக மீட்டனர். அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story