விவசாயிகள் தர்ணா
விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தொண்டி,
திருவாடானையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க தாலுகா செய லாளர் ராசு, பொருளாளர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இதில் விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் நாகநாதன், செயலாளர் அருள்சாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்தனம், விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர் நாகூர் பிச்சை, வக்கீல் தனபால் விவசாய சங்க தாலுகா குழு உறுப்பினர்கள் உத்திரகுமார், மணிகண்டன், முருகன், மெக்கேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வக்கீல் தனபால் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story