15 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
15 அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூடலூர் நகருக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கூடலூரில் இருந்து தேவர்சோலை செல்லும் சாலையில் ஒரு கார் சென்றது.
அந்த காரை கூடலூர் 1-மைல் பகுதியை சேர்ந்த அணில்(வயது 42) ஓட்டினார். புஷ்பகிரி பகுதியில் சென்றபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையோரம் உள்ள 15 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக அணில் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தனது சட்டைப்பையில் இருந்து தவறி காலுக்கு அடியில் விழுந்த செல்போனை அணில் எடுக்க முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story