அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். மண்டல பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனைவருக்கும் கட்டணமின்றி 2 முறை கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானம் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். 4 தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல்-டீசல் விலை
இதேபோன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கம்யூனிஸ்டு மற்றுமு் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story